இராஜ கண்ணப்பன் — அரசியல் பயணம்
- சட்டப்பேரவை வெற்றி
- வகித்த பதவி
- கட்சி
- 1991
திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, திமுக வேட்பாளரை 31,456 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.
- 1991–1996
அதிமுக அரசில் நெடுஞ்சாலைகள், பொதுப்பணி, மின்சாரத் துறை அமைச்சராக 1996 வரை பணியாற்றினார்.
- மே 2001
தாம் தொடங்கிய மக்கள் தமிழ் தேசம் கட்சியின் வேட்பாளராக இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளரிடம் 4,682 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
- மே 2006
இளையான்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளரை 12,706 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.
- மே 2009
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, காங்கிரஸின் ப. சிதம்பரத்திடம் 3,354 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
- 13 மே 2011
திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, திமுக வேட்பாளரிடம் 1,584 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
- 19 மார்ச் 2019
அதிமுகவிலிருந்து விலகி, திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.
- 2020
திமுகவில் இணைந்தார்.
- 2 மே 2021
முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளரை 20,721 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.
- 7 மே 2021
மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
- 29 மார்ச் 2022
போக்குவரத்துத் துறையிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றப்பட்டார்.
- 21 டிசம்பர் 2023
உயர் கல்வித் துறையும் கூடுதலாக அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
- 29 செப்டம்பர் 2024
பால்வளம், கதர் மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சரானார்.
- 27 ஏப்ரல் 2025
வனத் துறையும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
- 4 மே 2026
முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் வென்றார்.
2026 முழு முடிவைப் பாருங்கள்
